ADDED : ஜன 13, 2024 12:09 AM
பெரம்பூர், பெரம்பூர், குருமூர்த்தி கார்டன் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரி, 73.
கடந்த 11ம் தேதி, இவரது வீட்டில் சமையல் 'காஸ்' கசிவு ஏற்பட்டுள்ளது. இதை உணராத சுந்தரி, வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், மூதாட்டியின் உடலில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் குப்புசாமி, தீயை அணைத்தார். வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுந்தரி, ஆபத்தான நிலையில் உள்ளார். செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.