ADDED : செப் 11, 2025 02:49 AM
குறைதீர் முகாமில்
57 மனு ஏற்பு
ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் சங்கர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில், கமிஷனர் சங்கர் 57 மனுக்கள் பெற்று, அதிகாரிகள் வாயிலாக தீர்வு காண உத்தரவிட்டார். முகாமில், போலீசார் மற்றும் 80க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.
வீடு கட்டி
தருவதாக மோசடி
திருவொற்றியூர்: திருவொற்றியூரைச் சேர்ந்தவர் கீதா, 41. இவர், ஆவடியில் 1,200 சதுர அடி பரப்பில் வீடு கட்டுவதற்காக, திருவொற்றியூர், காந்தி நகரைச் சேர்ந்த சிவராமன் என்பவரை அணுகியுள்ளார். அவர், சதுர அடிக்கு 1,500 ரூபாய் வீதம், 24.65 லட்சம் ரூபாய், 40 சவரன் நகைகளை, கீதா கொடுத்ததாக கூறப்படுகிறது.ஆனால், வீடு கட்டி தராமல் சிவராமன் ஏமாற்றி வந்துள்ளார். இது குறித்த வழக்கில் போலீஸ் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, சிவராமன் மீது மூன்று பிரிவுகளின் கீழ், திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
போலீஸ் வாகனங்கள்
ஆவடியில் ஏலம்
ஆவடி: ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில் கழிவு செய்யப்பட்ட, 10 வாகனங்கள் வரும் 16ம் தேதி ஆவடி ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் ஏலம் விடப்பட உள்ளது. மேற்படி வாகனங்கள், 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். ஏலம் கேட்க கேட்க விரும்புவோர் ஆதார் கார்டு நகலை அளித்து, தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.