/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மக்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்த வாரியம் மக்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்த வாரியம்
மக்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்த வாரியம்
மக்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்த வாரியம்
மக்களின் கோரிக்கையை ஏற்று போர்வெல் அமைத்த வாரியம்
ADDED : செப் 11, 2025 02:44 AM
மணலி,: அரசு சிறப்பு முகாமில், மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், குடிநீர் வாரியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
மணலி மண்டலம், 20வது வார்டு, ஒற்றவாடை தெருவில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, குடிநீர் தவிர்த்து பிற தேவைக்கான தண்ணீர் வசதி இல்லை என, அப்பகுதி மக்கள், 'உங்களுடன் ஸ்டாலின்' அரசு முகாமில் மனு வழங்கியிருந்தனர்.
இதை பரிசீலித்த மணலி மண்டல குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அதிகாரிகள், அந்த இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, நிலத்தடி நீரை பயன்படுத்தும் வகையில், ஏழு லட்ச ரூபாய் செலவில், 10 குழாய்கள் அமைக்கப்பட்டன. நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.