/உள்ளூர் செய்திகள்/சென்னை/ செய்திகள் சில வரிகளில்.. கார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல் செய்திகள் சில வரிகளில்.. கார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல்
செய்திகள் சில வரிகளில்.. கார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல்
செய்திகள் சில வரிகளில்.. கார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல்
செய்திகள் சில வரிகளில்.. கார் ஓட்டுநர்கள் மீது தாக்குதல்
ADDED : செப் 23, 2025 01:31 AM

முகப்பேர்: முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 35; கால் டாக்ஸி ஓட்டுநர். இவர், நேற்று அதிகாலை, நண்பர் கருப்பசாமியுடன், முகப்பேர் மேற்கு மூன்றாவது பிளாக் மீன் சந்தை அருகே, காரை நிறுத்தி டீக்குடிக்க சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது, காரின் முன் பக்கத்தில் அமர்ந்து, இரண்டு பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில், ராமச்சந்திரனுக்கு முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சரவணன் லேசான காயங்களுடன் தப்பினார். நொளம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மீனவர்கள்
ஆர்ப்பாட்டம்
காசிமேடு: காசிமேடில் மீன்பிடித் தொழிலுக்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்தால், இந்த தொழிலையே நம்பி வாழும் 5,000 மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்படுவர் எனவும், அதை கைவிடாவிட்டால் விசைப்படகுகளை கடலுக்கு அனுப்ப மாட்டோம் எனவும் கூறி, காசிமேடில் நேற்று மாலை 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார், விசாரணை நடத்தி இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
லாரி மோதி
மீடியன் சேதம்
கொருக்குப்பேட்டை: சென்னை மாநகராட்சி குப்பை சேகரிக்கும் லாரி, கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் இறக்கும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மீடியனில் மோதியது. இந்த விபத்தில், மீடியனில் அமைக்கப்பட்டிருந்த ஸ்டீல் கம்பிகள் 180 மீட்டர் நீளத்திற்கு சேதமடைந்தது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குப்பை லாரியை அப்புறப்படுத்தினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.