/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கலைக்கல்லுாரி புது கட்டடம் அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு கலைக்கல்லுாரி புது கட்டடம் அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
கலைக்கல்லுாரி புது கட்டடம் அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
கலைக்கல்லுாரி புது கட்டடம் அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
கலைக்கல்லுாரி புது கட்டடம் அடுத்த மாதம் திறக்க ஏற்பாடு
ADDED : ஜூன் 18, 2025 12:28 AM

திருவொற்றியூர், திருவொற்றியூரில் கலைக்கல்லுாரிக்கு, புதிய பேருந்து நிலையம் அருகே, ரீட் கூட்டுறவுக்கு சொந்தமான, 2.14 ஏக்கர் நிலத்தில், 16 கோடி ரூபாய் செலவில், 18 வகுப்பறைகளுடன் புது கட்டடம் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்தாண்டு மார்ச்சில் திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் அடிக்கல் நாட்டினார்.
தற்போது, கட்டுமான பணிகள், 75 சதவீதம் முடிந்துள்ளன. பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, அடுத்த மாதம் இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனக் கூறப்படுகிறது.
புதிய கல்லுாரி கட்டடம் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், இதுவரை பி.காம்., - பி.சி.ஏ., - பி.ஏ., உள்ளிட்ட ஐந்து கலை பிரிவு படிப்புகள் மட்டுமே செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக அறிவியல் பாடப்பிரிவுகளுக்கான படிப்புகள் இடம் பெறும்.
இதனால், மத்திய சென்னையை நோக்கி படையெடுக்கும் வடசென்னை மாணவர்களின் கல்வி தேவை, இங்கேயே பூர்த்தியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.