/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'முருகா முருகா நின்னடி' பாடல் குறுந்தகடு வெளியீடு 'முருகா முருகா நின்னடி' பாடல் குறுந்தகடு வெளியீடு
'முருகா முருகா நின்னடி' பாடல் குறுந்தகடு வெளியீடு
'முருகா முருகா நின்னடி' பாடல் குறுந்தகடு வெளியீடு
'முருகா முருகா நின்னடி' பாடல் குறுந்தகடு வெளியீடு
ADDED : செப் 22, 2025 03:15 AM

சென்னை: சுவாமி பத்மேந்திரா இயற்றிய, 'முருகா முருகா நின்னடி' ஞானத்திரு பாடல் குறுந்தகடை, அமைச்சர் சேகர்பாபு நேற்று வெளியிட்டார்.
தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா இயற்றிய, 'முருகா முருகா நின்னடி' ஞானத்திரு பாடலை, திரைப்பட பின்னணி பாடகரும், இசை அமைப்பாளருமான பிரபாகர் இசையமைத்து பாடியுள்ளார்.
இப்பாடலின் குறுந்தகடு வெளியிட்டு விழா, திருவான்மியூர், பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் கோவிலில், நேற்று நடந்தது.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, ஞானத்திரு பாடலின் குறுந்தகடை வெளியிட்டு பேசுகையில், ''முருகா முருகா நின்னடி பாடல் சிறப்பாக அமைந்துள்ளது. வரிகளில் பக்தி பரவசமும், முருகனை தினமும் நினைக்கும் வகையிலும் அமைந்துள்ளன. இப்பாடலை வெளியிடுவதை பெரும் பாக்கியமாக கருதுகிறேன்,'' என்றார்.
குறுந்தகட்டின் முதல் பிரதியை, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திரன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, சென்னை மாவட்ட நீதிபதி முருகேசன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா பேசியதாவது:
முருகனை வழிபடும்போது, அருளும், செல்வமும் சேர்த்து வாரி வழங்குகிறார். இந்த கலியுகத்தில் உண்மையான கலிவரதன் முருகப்பெருமான்.
'அரோகரா' நாமத்தால் இறைவன் அருளை பறைசாற்றுகிறோம். அவரின் அருளை பெற்றவர் பாம்பன் சுவாமிகள்.
வள்ளலார் அருளிய தெய்வமணிமாலை எனும் அருட்பா பாடல்கள், முருகன் மேல் பக்தியை செலுத்தும் வகையில் இருக்கும். அந்த வழியில் நானும், முருகன் மீது பாடல் எழுத அருள் பெற்றேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, 'பீனிக்ஸ் மெலோடிஸ் - ஆன்மிக பாடல்கள்' யு - டியூப் சேனலில், திருஞான பாடல் ஒளிபரப்பை, சென்னை காவல் துறை மாநில குற்ற ஆவண காப்பக தலைவர் ஜெயஸ்ரீ வெளியிட்டார்.
அண்ணாமலை பல்கலை பேராசிரியர் அம்பேத்கர், சென்னை சாய் சமர்ப்பன அறக்கட்டளை நிறுவனர் ஜெகத் ராம்ஜி, கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பாடலுக்கான இசையமைப்பாளர் பிரபாகர் ஏற்புரை வழங்கினார்.
முன்னதாக, சென்னை மேற்கு மாம்பலம் தபஸ்யா நடனப்பள்ளி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. நாடக ஆசிரியர் சந்திரமோகன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.