/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.500 கோடியில் மேம்படுது சென்னை அண்ணா பல்கலை ரூ.500 கோடியில் மேம்படுது சென்னை அண்ணா பல்கலை
ரூ.500 கோடியில் மேம்படுது சென்னை அண்ணா பல்கலை
ரூ.500 கோடியில் மேம்படுது சென்னை அண்ணா பல்கலை
ரூ.500 கோடியில் மேம்படுது சென்னை அண்ணா பல்கலை
ADDED : செப் 22, 2025 03:15 AM
சென்னை:''பெண் கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது,'' என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரி, முன்னாள் மாணவர் சங்கத்தின், நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, அண்ணா பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன், புதிதாக கட்டப்பட்ட புகழ் மண்டபத்தை திறந்து வைத்தார்.
விழாவில், கோவி.செழியன் பேசுகையில், ''அகில இந்திய அளவில், முனைவர் பட்டம் பெறுவர்களின், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண் கல்வியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
''கடந்த 1944ல் இன்ஜினியரிங் படிப்பில் பெண் ஒருவர் சேர்ந்த கல்லுாரி என்ற பெருமை, கிண்டி இன்ஜினியரிங் கல்லுாரிக்கு உண்டு,'' என்றார்.
உயர்கல்வித்துறை செயலர் சங்கர் பேசுகையில், ''அண்ணா பல்கலை 500 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு அம்சங்களுடன் மேம்படுத்தப்பட உள்ளது. அதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்,'' என்றார்.