/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருநீர்மலை ஏரியில் குவிந்த மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் நாளை ஆஜராக உத்தரவு திருநீர்மலை ஏரியில் குவிந்த மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் நாளை ஆஜராக உத்தரவு
திருநீர்மலை ஏரியில் குவிந்த மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் நாளை ஆஜராக உத்தரவு
திருநீர்மலை ஏரியில் குவிந்த மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் நாளை ஆஜராக உத்தரவு
திருநீர்மலை ஏரியில் குவிந்த மருத்துவ கழிவுகள் மாநகராட்சி கமிஷனர் நாளை ஆஜராக உத்தரவு
ADDED : ஜூன் 12, 2025 12:12 AM
சென்னை, 'திருநீர்மலை ஏரிக்கரையில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, தாம்பரம் மாநகராட்சி கமிஷனர், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நாளை ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த திருநீர்மலை ஏரிக்கரையில் மருத்துவக கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக, 2023 ஆக., 31ல் நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து, வழக்கு பதிந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
தாம்பரம் மாநகராட்சியில் கட்டட அனுமதி வழங்கும்போது நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன என்பதையும், 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகள் கண்டிப்புடன் கடைபிடிக்கப்படுகிறதா என்பதையும் தெளிவுபடுத்தும்படி, இந்தாண்ட ஜனவரி 21ல் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்டதால் ஏற்பட்டுள்ள மாசு குறித்து பகுப்பாய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தாம்பரம் மாநகராட்சியும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இதுவரை எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை.
வழக்கின் அடுத்த விசாரணை தேதியான நாளைக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தாம்பரம் மாநகராட்சி கமிஷனர், தீர்ப்பாயத்தில் நாளை, 'வீடியோ கான்பிரன்ஸ்' வாயிலாக ஆஜராகி, இந்த விஷயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
***