/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு
மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு
மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு
மாநகராட்சி ஊழியர்களுக்கு மேயர் ப்ரியா பரிசளிப்பு
ADDED : மே 22, 2025 12:17 AM

சென்னை, சென்னை மாநகராட்சி சார்பில், மாநகராட்சியின் கவுன்சிலர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆண்டுதோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 3ல் துவங்கி 25ம் தேதி வரை நடந்தன.
கேரம், சதுரங்க, கால்பந்து, கோ - கோ, டென்னிஸ், கைப்பந்து உட்பட 17 போட்டிகளில், 2,799 பேர் போட்டியிட்டனர்.
இதில் வெற்றி பெற்ற 559 பேருக்கு, சென்னை, ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா பங்கேற்று, வீரர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.