/உள்ளூர் செய்திகள்/சென்னை/மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடற்கரைகளில் கோலாகலம்மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடற்கரைகளில் கோலாகலம்
மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடற்கரைகளில் கோலாகலம்
மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடற்கரைகளில் கோலாகலம்
மாசி மக தீர்த்தவாரி உற்சவம் கடற்கரைகளில் கோலாகலம்
ADDED : பிப் 24, 2024 11:23 PM

சென்னை :மாசி மகத்தை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் அழைப்பர். மாசி மகம் நீர்நிலைகளின் மேன்மையை மக்களுக்கு போதிக்கிறது.
இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி, மாசி மகம் திருவிழாவை முன்னிட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாசி மகம் 'கடலாடும் நாள்' கோலாகலமாக நடந்தது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், மாங்காடு வெள்ளீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், தீர்த்தவாரி உற்சவம் நேற்று நடந்தது.
காலை, சக்ரத்தாழ்வாருடன் சமுத்திரத்திற்கு புறப்பட்ட உற்சவர் பார்த்தசாரதி பெருமாள், கடலில் நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலுக்கு திரும்பினார்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இருந்து சந்திரசேகர் சுவாமி மெரினா கடற்கரைக்கு எழுந்தருளி, நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்து கோவிலுக்கு திரும்பினார்.
அதேபோல, பெசன்ட்நகர், அஷ்டலட்சுமி கோவில் உற்சவர் ஸ்ரீனிவாசப் பெருமாள், கிண்டி, கோதண்டராமர் கோவில் உற்சவர் சென்னை, எலியட்ஸ் கடற்கரையில் கடல்நீராடி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.