/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.2.11 கோடி மோசடி நெல்லை நபர் சிக்கினார் ரூ.2.11 கோடி மோசடி நெல்லை நபர் சிக்கினார்
ரூ.2.11 கோடி மோசடி நெல்லை நபர் சிக்கினார்
ரூ.2.11 கோடி மோசடி நெல்லை நபர் சிக்கினார்
ரூ.2.11 கோடி மோசடி நெல்லை நபர் சிக்கினார்
ADDED : ஜூன் 15, 2025 12:16 AM

சென்னை, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் பரத்குமார், 39. இவர் 'ஸ்கிரீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட்' என்ற தனியார் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார்.
இந்நிறுவனம், நாடு முழுதும் சூரிய சக்தியில் மின் உற்பத்தி செய்யும் பிளான்டை நிறுவி நிர்வகித்து வருகிறது. கடந்த மார்ச் 10ம் தேதி, பரத்குமார் காஞ்சிபுரம் பகுதியில் சோலார் பவர் பிளான்டை நிறுவுவதற்காக அஜய் ரோகன், சிவராஜன் சக்திவேல், சந்திரகாந்த் ஆகியோரை அணுகி, நிலம் வாங்குதல் மற்றும் அங்கீகாரம் பெறுதல், கட்டுமானம் போன்ற பணிகளுக்காக, 2.11 கோடி கொடுத்துள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்டவர்கள் ஏமாற்றியதை அறிந்த பரத்குமார், சம்பவம் குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், வழக்கில் தொடர்புடைய, அஜய்ரோகன், 36, என்பவரை, 3ம் தேதியும், சிவராஜன் சக்திவேல், 29, என்பவரை, 4ம் தேதியும் கைது செய்தனர்.
இந்நிலையில் தலைமறைவான நெல்லையைச் சேர்ந்த சந்திரகாந்த், 29, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.