/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டெபாசிட்' செய்ய வந்தவரை தாக்கி ரூ. 2.70 லட்சம் பறிப்பு 'டெபாசிட்' செய்ய வந்தவரை தாக்கி ரூ. 2.70 லட்சம் பறிப்பு
'டெபாசிட்' செய்ய வந்தவரை தாக்கி ரூ. 2.70 லட்சம் பறிப்பு
'டெபாசிட்' செய்ய வந்தவரை தாக்கி ரூ. 2.70 லட்சம் பறிப்பு
'டெபாசிட்' செய்ய வந்தவரை தாக்கி ரூ. 2.70 லட்சம் பறிப்பு
ADDED : ஜூன் 21, 2025 12:20 AM
கீழ்ப்பாக்கம், சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் மைனர் அலி, 39. இவர், அம்பத்துாரில் உள்ள தனியார் 'பேக்' கடையில் பணிபுரிகிறார்.
இவர், 2.70 லட்சம் ரூபாயை, தன் வங்கி கணக்கிற்கு 'டெபாசிட்' செய்ய, கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில், நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார்.
அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த மூவர், தாக்கி பணத்தை பறித்து, மைனர் அலியின் இருசக்கர வாகனத்திலேயே தப்பினர். இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், மைனர் அலி, 'ஹவாலா' பணத்தை கைமாற்றி விட்டு, 'கமிஷன்' பெறுபவர் என்பது தெரியவந்தது. 'டெபாசிட்' செய்ய வந்த 2.70 லட்சம் ரூபாயும், மலேஷியாவில் உள்ள ரியாஸ் என்பவர் கூறியதன்படி, பிராட்வேயில் முகமது என்பவரிடம் வாங்கியது தெரிந்தது. இது குறித்து கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.


