ADDED : ஜூன் 21, 2025 12:19 AM

தண்டையார்பேட்டை, தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அன்புகுமார், 23. தனியார் கட்டுமான நிறுவன மேற்பார்வையாளர். இந்நிறுவனம், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில், தண்டையார்பேட்டை பகுதியில், மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி மேற்கொண்டு வருகிறது.
அதற்கான கட்டுமான பொருட்கள், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பில் உள்ள காலி இடத்தில் வைக்கப்பட்டிருந்தன. அதில், 75 கிலோ இரும்பு சுருள்கள், 150 கிலோ இரும்பு கம்பிகளை மர்ம நபர் திருடி சென்றார்.
இது குறித்து தண்டையார்பேட்டை போலீசில் அன்புகுமார் நேற்று புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த ராமு, 49, என்பவரை கைது செய்து 75 கிலோ இரும்பு சுருள்களை மீட்டனர்.


