/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மெட்ரோ ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது மெட்ரோ ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மெட்ரோ ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மெட்ரோ ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
மெட்ரோ ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
ADDED : ஜூன் 07, 2025 12:28 AM
சென்னை, கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ், 35; மெட்ரோ ரயில் ஊழியர். கடந்த 5ம் தேதி இரவு, தி.நகர் தர்மாபுரம், கே.எச்., சாலை வழியாக நடந்து சென்றார்.
அப்போது அவரை வழிமறித்த மர்மநபர், மது அருந்த பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். தினேஷ் பணம் தர மறுத்ததால், மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி, 500 ரூபாயை பறித்து, கொலை மிரட்டல் விடுத்து, மர்மநபர் தப்பினார்.
இதுகுறித்து, சவுந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், திருவள்ளூர் மாவட்டம், ஆலத்துாரைச் சேர்ந்த மோகன், 27, என்பவர், கத்திமுனையில் பணம் பறித்தது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.