/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருமணமான ஒன்பது நாளில் பட்டதாரி பெண் தற்கொலை திருமணமான ஒன்பது நாளில் பட்டதாரி பெண் தற்கொலை
திருமணமான ஒன்பது நாளில் பட்டதாரி பெண் தற்கொலை
திருமணமான ஒன்பது நாளில் பட்டதாரி பெண் தற்கொலை
திருமணமான ஒன்பது நாளில் பட்டதாரி பெண் தற்கொலை
ADDED : ஜூன் 07, 2025 12:28 AM
ஆதம்பாக்கம், செஞ்சியை சேர்ந்தவர் ஜெகன்நாதன், 30. பி.எஸ்.சி., பட்டதாரியான இவர், சென்னை ஆதம்பாக்கம், அம்பேத்கர் நகரில் இரண்டு ஆண்டுகளாக தங்கி, 'பிலிப்கார்ட்' நிறுவன டெலிவரி ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
வந்தவாசி, மம்முன்னை கிராமத்தை சேர்ந்த மண்ணு-லதா தம்பதியின் மகள் ஷாலினி, 26; பி.காம்., பட்டதாரி.
ஜெகன்நாதனுக்கும், ஷானிக்கும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் 28ம் தேதி, நங்கநல்லுாரில் திருமணம் நடந்தது. இருவரும் மறு வீடாக சொந்த ஊர் சென்று, நேற்று முன்தினம் வீடு திரும்பினர்.
நேற்று காலை, 'தலைவலியாக உள்ளது; மாத்திரை வாங்கி வாருங்கள்' என, கணவரிடம் கூறியுள்ளார். ஜெகன்நாதனும் மாத்திரை மற்றும் காலை உணவு வாங்கி கொடுத்துவிட்டு, அதே பகுதியில் வசிக்கும் தன் சகோதரி விஜயா வீட்டிற்கு சென்றுள்ளார்.
நேற்று மதியம், சகோதரி வீட்டில் சாப்பிடலாம் என, மொபைல் போனில் ஷாலினியை அழைத்துள்ளார். பலமுறை தொடர்பு கொண்டும், அவர் பதில் அளிக்கவில்லை. வீட்டிற்கு வந்த ஜெகன்நாதன் கதவை தட்டினார். உட்புறம் தாழிலிடப்பட்ட இருந்தது.
நீண்டநேரம் தட்டியும் சந்தேகமடைந்த ஜெகன்நாதன் ஜன்னலை திறந்து பார்த்தபோது, ஷாலினி துாக்கில் தொங்கினார். ஆதம்பாக்கம் போலீசார் கதவை உடைத்து, ஷாலினியை மீட்டு வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஷாலினி இறந்து விட்டதை உறுதி செய்தனர். ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து, விசாரித்து வருகின்றனர்.
***