/உள்ளூர் செய்திகள்/சென்னை/திறந்தவெளி கழிப்பிடமான பிரதான சாலை நடைபாதைதிறந்தவெளி கழிப்பிடமான பிரதான சாலை நடைபாதை
திறந்தவெளி கழிப்பிடமான பிரதான சாலை நடைபாதை
திறந்தவெளி கழிப்பிடமான பிரதான சாலை நடைபாதை
திறந்தவெளி கழிப்பிடமான பிரதான சாலை நடைபாதை
ADDED : ஜன 11, 2024 01:23 AM

அமைந்தகரை, பிரதான சாலையிலுள்ள நடைபாதை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளதால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், அமைந்தகரையில், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளது.
இங்கு நுங்கம்பாக்கம், சூளைமேடு பகுதியில் இருந்து அண்ணா நகர் வழி, அண்ணா நகரில் இருந்து சூளைமேடு வழி என, இருவழிப் பாதைகள் உள்ளன.
இங்குள்ள சாலையோர நடைபாதையை, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலையில் பிரபல மருத்துவமனை, நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்த சாலையிலுள்ள நடைபாதையை, மாநகராட்சியினர் முறையாக பராமரிப்பது கிடையாது. இந்த நடைபாதையில் காலி மதுபாட்டில்கள் அதிக அளவில் வீசப்பட்டுள்ளன.
அத்துடன், பலர் நடைபாதையில் சிறுநீர் கழிப்பதால், சாலையில் சிறுநீர் வழிந்தோடுகிறது. இதனால், இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த வழியாகச் செல்வோர், துர்நாற்றத்தால் மூக்கைப் பிடித்தபடி செல்லும் நிலை உள்ளது.
சென்னையில் பிரதான சாலைகளில், மக்கள் பயன்பாட்டிற்காக, மாநகராட்சி சார்பில் கழிப்பறைகள், ஒப்பனை அறைகள் அமைக்கப்படுகின்றன.
அதேபோல், இந்த சாலையிலும் கழிப்பறைகளை அமைத்தால், இதுபோன்ற பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.