Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

ஜூலை 08 ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் ?

ADDED : ஜூன் 29, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: ஜூலை 08-ம் தேதி பிரதமர் மோடி ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளதாக கடந்த 24-ம் தேதி அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இந்தியா - ரஷ்யா உச்சி மாநாடு ரஷ்யாவில் நடக்க உள்ளது. கடைசியாக 2021 ம் ஆண்டு டிச.26-ம் தேதி டில்லியில் நடந்தது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்றார்.

இந்நிலையில் ரஷ்ய உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்பது குறித்து நேற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி வரும் ஜூலை 08-ம் தேதி பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் உறுதியாகியுள்ளது. இப்பயணத்தின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து இரு தரப்பு பரபஸ்பரம் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

. உக்ரைனுடனான போருக்கு பின் முதன்முறையாக மோடி ரஷ்யா செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us