/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரத்தில் மின் சுவர் திரை துவக்கம்தாம்பரத்தில் மின் சுவர் திரை துவக்கம்
தாம்பரத்தில் மின் சுவர் திரை துவக்கம்
தாம்பரத்தில் மின் சுவர் திரை துவக்கம்
தாம்பரத்தில் மின் சுவர் திரை துவக்கம்
ADDED : ஜன 31, 2024 12:21 AM
தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசின் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பொதுமக்கள் அறியும் வகையில் அமைக்கப்பட்ட புதிய மின் சுவர் திரையை அமைச்சர்கள் அன்பரசன், சாமிநாதன் ஆகியோர் நேற்று முன் தினம் துவக்கி வைத்தனர்.
அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
அனைத்து மாநகராட்சிகளிலும் முதல் கட்டமாக மின் சுவர் திரையை துவக்குவதை இலக்காக கொண்டு, செய்தித் துறை செயல்பட்டு வருகிறது.
படிப்படியாக அனைத்து நகரங்களிலும் துவக்கப்பட்டு, அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பும், பங்களிப்பும் இருந்தால் தான், சிறப்பாக செயல்படுத்த முடியும். சமூக அக்கறையுடன் பொதுமக்களும் இதில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.