ADDED : பிப் 12, 2024 02:09 AM

காஞ்சிபுரம்,:ஜி.கே.கிரிக்கெட் அகாடமி சார்பில், லீக் முறையிலான, 20 ஓவர் கிரிக்கெட் தொடர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கடந்த மாதம் துவங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, ராணிபேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 12 அணிகள் பங்கேற்றன.
இத்தொடரின் அரை இறுதியில் காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணி, திருத்தணி சைபர் டிரான்ஸ் சூப்பர் கிங்ஸ் அணியுடன் நேற்று முன்தினம் மோதியது. முதலில் பேட்டிங் செய்த திருத்தணி அணி, 20 ஓவரில், 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
இதில், 125 ரன்கள் என்ற இலக்குடன் ஆட்டத்தை துவக்கிய காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியினர், 20வது ஓவர் முதல் பந்தில் பவுண்டரியுடன் நிறைவு செய்து, அப்போட்டியை வென்றது. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
வரும் 17ல் நடக்கும் மற்றொரு அரையிறுதியில் ஸ்ரீபெரும்புதுார் அணியும், திருத்தணி அணியும் மோதுகின்றன.
இதில் வெற்றி பெறும் அணியும், காஞ்சி கிரிக்கெட் அகாடமி அணியும், மார்ச் 3ல் நடக்கும் இறுதி போட்டியில் மோதும்.