/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 6வது மாடியில் குதித்து உயிரை மாய்த்த ஐ.டி., ஊழியர் 6வது மாடியில் குதித்து உயிரை மாய்த்த ஐ.டி., ஊழியர்
6வது மாடியில் குதித்து உயிரை மாய்த்த ஐ.டி., ஊழியர்
6வது மாடியில் குதித்து உயிரை மாய்த்த ஐ.டி., ஊழியர்
6வது மாடியில் குதித்து உயிரை மாய்த்த ஐ.டி., ஊழியர்
ADDED : ஜூன் 13, 2025 12:20 AM
பெருங்களத்துார், திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ், 26. பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
வழக்கம்போல, நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
பேசி முடித்ததும், அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து ஆறாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பீர்க்கன்காரணை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சூரிய பிரகாஷ் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்து பெண், திடீரென பேசுவதை நிறுத்தி காதலை மறுத்ததாகவும், அதன் காரணமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.