/உள்ளூர் செய்திகள்/சென்னை/புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் அதிகரிப்புபுறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் அதிகரிப்பு
புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் அதிகரிப்பு
புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் அதிகரிப்பு
புறநகர் மின்சார ரயில்கள் சேவைகள் அதிகரிப்பு
ADDED : பிப் 24, 2024 12:07 AM
சென்னை, சென்னை, சென்ட்ரலில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நேற்று, சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா அளித்த பேட்டி:
தெற்கு ரயில்வேயின் கீழ் உள்ள 77 ரயில் நிலையங்கள், உலகத்தரம் வாய்ந்தவையாக மேம்படுத்த உள்ளோம்.
நாளை மறுநாள், பிரதமர் மோடி, நாடு முழுதும் 554 ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்வதற்கான பணிக்கு, காணொளிவாயிலாக அடிக்கல் நாட்டுகிறார்.
இதில், தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் ஏழு ரயில் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
வில்லிவாக்கத்தில் புதிய ரயில் முனையம் அமைப்பதற்கான நிலம் கையாகப்படுத்தும் பணி நடக்கிறது.
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் ஐந்து ரயில்களை கூடுவாஞ்சேரி வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நெரிசல் நேரங்களில், இருவழித்தடத்திலும் தலா ஐந்து என, 10 ரயில்கள் இயக்கப்படும்.
அதேபோல், யானைக்கவுனி மேம்பால பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்பட உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளும், ஆறு மாதங்களில் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.