ADDED : ஜூலை 02, 2025 12:19 AM
சென்னை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கத்தினர், ஊதிய உயர்வு, விருப்ப பணி மாறுதல், சிறப்பு பயணப்படி, ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, வரும் 4ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
கோரிக்கை தொடர்பாக, நாளை சமரச பேச்சு நடத்த இருப்பதால், 4ம் தேதி நடக்க இருந்த போராட்டம் ரத்து செய்யப்படுவதாக, சங்கத்தின் மாநில தலைவர் ஜே.வாலன்றின் பிரிட்டோ தெரிவித்தார்.