/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவனுக்கு பாலியல் தொல்லை சிகை அலங்கார கலைஞர் கைது சிறுவனுக்கு பாலியல் தொல்லை சிகை அலங்கார கலைஞர் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை சிகை அலங்கார கலைஞர் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை சிகை அலங்கார கலைஞர் கைது
சிறுவனுக்கு பாலியல் தொல்லை சிகை அலங்கார கலைஞர் கைது
ADDED : ஜூன் 06, 2025 12:23 AM
சென்னை, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், 15 வயது சிறுவனின் பெற்றோர், நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்திருந்தனர்.
அதில், தி.நகர் சோமசுந்தரம் தெருவில் உள்ள பிரபல சலுான் கடையில், தன் மகன் முடி திருத்தம் செய்வதற்காக பைக்டாக்சியில் சென்றார்.
அப்போது, முடி திருத்தம் செய்துவிட்டு, சிகை அலங்கார கலைஞர் மசாஜ் செய்துவிடுவதாக கூறி, தனி அறைக்கு அழைத்துச் சென்று, ஆடையை கழற்றி சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, வடமாநிலத்தைச் சேர்ந்த ஜான், 31, என்பவரை, நேற்று முன்தினம் இரவு போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.