/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பாடி மேம்பாலத்தில் விபத்துகள் 'சிசிடிவி' இல்லாததால் சிக்கல் பாடி மேம்பாலத்தில் விபத்துகள் 'சிசிடிவி' இல்லாததால் சிக்கல்
பாடி மேம்பாலத்தில் விபத்துகள் 'சிசிடிவி' இல்லாததால் சிக்கல்
பாடி மேம்பாலத்தில் விபத்துகள் 'சிசிடிவி' இல்லாததால் சிக்கல்
பாடி மேம்பாலத்தில் விபத்துகள் 'சிசிடிவி' இல்லாததால் சிக்கல்
ADDED : ஜூன் 06, 2025 12:23 AM

வில்லிவாக்கம் :சென்னையில் முக்கிய மேம்பாலங்களில் ஒன்றான பாடி மேம்பாலம், வில்லிவாக்கம், கொரட்டூர் மற்றும் அண்ணா நகரை இணைக்கும் பகுதியாக உள்ளது.
திருமங்கலம், வில்லிவாக்கம், கொரட்டூர் காவல் எல்லையின் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், தினமும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர்.
இவ்வளவு முக்கியதுவம் வாய்ந்த மேம்பாலத்தின் மைய பகுதியில், கண்காணிப்பு கேமரா உடைந்து, இணைப்பின்றி தொங்குகிறது.
இதனால், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, அவ்வழியாக தப்பிச் செல்வோரை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மேம்பாலத்தில் முறையான பராமரிப்பு கிடையாது; எட்டு பாதைகள் முழுதும், விபத்து அபாயத்தில் மணல் சிதறி கிடக்கின்றன.
தினமும் இரண்டுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடக்கின்றன. உடைந்து தொங்கும் கண்காணிப்பு கேமராவை, உடனடியாக சீரமைக்க போலீசார் முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.