ADDED : ஜன 07, 2024 12:27 AM
ஓட்டேரி, ஓட்டேரி காவல்நிலையத்தில் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட குட்கா, மாவா உள்ளிட்ட 770 கிலோ அளவிலான போதை வஸ்துகள் கைப்பற்றி வைக்கப்பட்டிருந்தது.
நீதிமன்ற வழக்குக்கு ஆதாரமாக வைக்கப்பட்டிருந்த இந்த போதை வஸ்துவை காவல்நிலையத்தில் பணியாற்றிய போலீஸ்காரரே திருடி சென்று வெளிநபர்களுக்கு விற்றது தெரியவந்துள்ளது. இதுகுறித்த சி.சி.டி.வி., காட்சிகளும் வெளியாகி புளியந்தோப்பு காவல் சரகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரரிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.