/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம் கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம்
கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம்
கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம்
கோயம்பேடு ரவுண்டானாவில் பசுமை பூங்கா பணி இறுதிகட்டம்
ADDED : மே 27, 2025 01:12 AM

கோயம்பேடு,
கோயம்பேடு மேம்பாலம் ரவுண்டானாவின் கீழே, கட்டட கழிவு, பிளாஸ்டிக் மற்றும் வீணான டயர்கள், அதிக அளவில் கொட்டப்பட்டு வந்தன. இவற்றை அகற்றி, ரவுண்டானாவை அழகுபடுத்த வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதையடுத்து, கோயம்பேடு உள்வட்ட சாலை மற்றும் சென்னை - பூந்தமல்லி சாலை சந்திப்பு பகுதியில், 5 ஏக்கர் பரப்பளவில், 8.63 கோடி ரூபாயில், இயற்கை அழகுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கும் பணியில், சி.எம்.டி.ஏ., ஈடுபட்டுள்ளது.
பூங்காவில், சுற்றுப்புற காற்றின் துாய்மையை காக்கும் வகையில், மரங்கள் மற்றும் செடிகள்; நடைபாதை மற்றும் இருக்கைகள், 50 பேர் அமரக்கூடிய அரங்கம்; சிறுவர்கள் விளையாட்டு திடல்; உடற்பயிற்சி கூடம்; பைக் மற்றும் கார் பார்க்கிங் வசதி; செயற்கை நீருற்று ஆகியவை அமைய உள்ளன.
இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விரைவில் பூங்கா பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.