/உள்ளூர் செய்திகள்/சென்னை/குடியிருப்பில் ஜல்லி, மணல் விற்பனை வீடுகளில் துாசி படிந்து மக்கள் அவதிகுடியிருப்பில் ஜல்லி, மணல் விற்பனை வீடுகளில் துாசி படிந்து மக்கள் அவதி
குடியிருப்பில் ஜல்லி, மணல் விற்பனை வீடுகளில் துாசி படிந்து மக்கள் அவதி
குடியிருப்பில் ஜல்லி, மணல் விற்பனை வீடுகளில் துாசி படிந்து மக்கள் அவதி
குடியிருப்பில் ஜல்லி, மணல் விற்பனை வீடுகளில் துாசி படிந்து மக்கள் அவதி
ADDED : பிப் 06, 2024 12:41 AM

வில்லிவாக்கம், குடியிருப்பு பகுதியில் ஜல்லி, மணல் விற்பனை செய்வதால், துாசி படர்ந்து மக்கள் கடும் அவதியடைகின்றனர்.
சென்னை அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டு, வில்லிவாக்கம் தாதாங்குப்பம் அருகில், ராமகிருஷ்ணா நகர் உள்ளது. இங்குள்ள ஏராளமான வீடுகளில், 100க்கு மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்கு குடியிருப்பு மத்தியில், சாலையை ஆக்கிரமித்து ஜல்லி, மணல், செங்கல் உள்ளிட்டவை, தனிநபரால் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது குடியிருப்பு பகுதி என்பதால், இங்கு கொட்டப்படும் ஜல்லி, மணல் துாசிகள், இதை சுற்றியுள்ள வீடுகளில் படர்ந்து விடுகிறது. இதனால், வீடுகள் முழுதும் துாசிபடிந்து கடும் அவதியடைகின்றனர்.
அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
குடியிருப்பு பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், காய்வாயை ஆக்கிரமித்து, தனிநபரால் ஜல்லி மணல் கொட்டி, விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த இடம், குடிநீர் வாரியத்திற்கு சொந்தம் எனக் கூறப்படுகிறது. இக்கடையால், வீடுகளில் கடும் துாசி படர்ந்து குடியிருப்போர் அவதிப்படுகிறோம்.
பகல், இரவு பாராமல் கடும் சத்தம் நிலவுகிறது. இதனால் குழந்தைகள், முதியவர் என, பல தரப்பினர் சிரமப்படுகிறோம். இதுகுறித்து கேட்டால், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுகின்றனர்.
இதுதொடர்பாக சென்னை கலெக்டர், மண்டல அலுவலர், எம்.எல்.ஏ., வெற்றி அழகன் உள்ளிட்ட பல தரப்பினரிடம் புகார் அளித்து, இந்நாள் வரை நடவடிக்கை இல்லை. இப்பிரச்னைக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.