/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரசு கலை கல்லுாரியில் சேர்க்கை 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு அரசு கலை கல்லுாரியில் சேர்க்கை 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு கலை கல்லுாரியில் சேர்க்கை 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு கலை கல்லுாரியில் சேர்க்கை 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு கலை கல்லுாரியில் சேர்க்கை 27க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மே 21, 2025 12:57 AM
சென்னை:சென்னையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலைப் பட்டப் படிப்பு முதலாம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநில கல்லுாரியில் 2,380 இடங்கள், ராணி மேரி கல்லுாரியில் 2,083 இடங்கள், பாரதி மகளிர் கல்லுாரியில் 1,410 இடங்கள், காயிதே மில்லத் கல்லுாரியில் 1,468 இடங்கள் உட்பட எட்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் சென்னை மாவட்டத்தில் செயல்படுகின்றன.
இக்கல்லுாரிகளில் கல்வி கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படுள்ளது. புதுமைபெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2025-26ம் கல்வி ஆண்டில், இளநிலை பட்டயப்படிப்பு முதலாமாண்டு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்க விரும்புவோர், www.tngasa.in என்ற இணையதளத்தில் வரும் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும் கல்லுாரியில் உள்ள உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விபரங்களுக்கு, 044- 2434 3106, 2434 2911 என்ற எண்களில் தொடர்புக் கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.