/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ரூ. 65 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு இடம் மீட்பு
ADDED : மே 21, 2025 12:57 AM

கிண்டி :அடையாறு மண்டலம், 172வது வார்டு, கிண்டி, மடுவாங்கரையில், மாநகராட்சிக்கு சொந்தமான சமூதாய நலக்கூடம் உள்ளது.
இந்த இடத்தை ஒட்டி, 65 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 850 சதுர அடி பரப்பு இடத்தை, தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார்.
பத்திரப்பதிவும் செய்யப்பட்டிருந்தது. சமுதாய நலக்கூடத்தை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி முடிவு செய்தது.
இதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, நோட்டீஸ் வழங்கப்பட்டது. பல கட்ட நிர்வாக நடவடிக்கைக்கு பின், நேற்று போலீஸ் பாதுகாப்புடன், 850 சதுர அடி பரப்பு இடத்தை மாநகராட்சி மீட்டது.