/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ராட்சத கொடி கம்பங்கள் திருநின்றவூரில் அகற்றம் ராட்சத கொடி கம்பங்கள் திருநின்றவூரில் அகற்றம்
ராட்சத கொடி கம்பங்கள் திருநின்றவூரில் அகற்றம்
ராட்சத கொடி கம்பங்கள் திருநின்றவூரில் அகற்றம்
ராட்சத கொடி கம்பங்கள் திருநின்றவூரில் அகற்றம்
ADDED : மே 29, 2025 12:31 AM

ஆவடி,
தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, உள்ளாட்சி சாலை மற்றும் தெருக்களில் அரசியல் கட்சியினர் கொடி கம்பங்கள் மற்றும் கல்வெட்டு அமைத்துள்ளனர்.
'தமிழகம் முழுதும் பொது இடங்கள், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை, 12 வாரங்களில் அகற்ற வேண்டும்' என, கடந்த ஜனவரி மாதம் இறுதியில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பல இடங்களில் அரசியல் கட்சியினர், அமைப்புகள் தாங்களாக முன்வந்து கொடிக் கம்பங்களை அகற்றி வருகின்றனர். அந்த வகையில், திருநின்றவூர் நகராட்சி சார்பில், பிரகாஷ் நகர், சி.டி.எச்., சாலையில் அமைக்கப்பட்டு இருந்த ஒன்பது ராட்சத கொடி கம்பங்கள், கிரேன் உதவியுடன் நேற்று அகற்றப்பட்டன. திருநின்றவூர் நகராட்சியில் இதுவரை 50 கொடி கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.