ADDED : ஜன 06, 2024 12:04 AM
சென்னை, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள், வரும் 19 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் நடக்க உள்ளன. இதற்கான தேர்வுப் போட்டிகள், நாளை மறுதினம் நடக்க உள்ளன.
இதுகுறித்த அறிக்கை:
தேர்வுப்போட்டிகளில் ஆண்களுக்கான தடகளம் 1,500 மீட்டர் ஓட்டம், 2,000 மீட்டர் மற்றும் குண்டு எறிதல் போட்டிகள் நாளை மறுதினம் காலை 8:00 மணி முதல் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடக்க உள்ளன.
கடந்த 2005 ஜன., 1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். ஆதார், பிறப்பு சான்றிதழ், பள்ளி மற்றும் இருப்பிட சான்றிதழ் சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்கலாம்.