/உள்ளூர் செய்திகள்/சென்னை/இலவச கணினி மையம் கண்ணகி நகரில் திறப்புஇலவச கணினி மையம் கண்ணகி நகரில் திறப்பு
இலவச கணினி மையம் கண்ணகி நகரில் திறப்பு
இலவச கணினி மையம் கண்ணகி நகரில் திறப்பு
இலவச கணினி மையம் கண்ணகி நகரில் திறப்பு
ADDED : ஜன 31, 2024 12:22 AM

துரைப்பாக்கம், கண்ணகி நகர், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 23,704 வீடுகள் உள்ளன.
இங்குள்ள மக்களின் கல்வி தரத்தை மேம்படுத்த, அதே பகுதியில் முதல் தலைமுறை கற்றல் மையம் துவக்கப்பட்டது.
இங்கு, கல்வி மற்றும் தொழில் சார்ந்த பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, விர்டுசா பவுண்டேசன், 26 லட்சம் ரூபாய் செலவில், 30 கணினி உடைய மையத்தை அமைத்து கொடுத்தது.
இதை, முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, நேற்று துவக்கி வைத்தார். அடிப்படை கணினி பயிற்சி, டேலி உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதில், 16 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
மேலும், கண்ணகி நகர், காரப்பாக்கம், துரைப்பாக்கம் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயிற்சி பெற, 044 -- 2458 1021 என்ற தொலைபேசி எண்ணுக்கு, அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.