ADDED : மே 22, 2025 12:27 AM
சென்னை, ராஜஸ்தான் இளைஞர் சங்கம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், வேப்பேரியில், இலவச புத்தக வங்கி செயல்படுகிறது.
இதன் வாயிலாக, பி.காம்., - பி.பி.எம்., - பி.பி.ஏ., - ஐ.எஸ்.எம்., - பி.எஸ்.சி., - பி.இ., உள்ளிட்ட அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளுக்கான புத்தகங்களையும் இலவசமாக வழங்குகிறது.
இதற்கு, www.ryabookbank.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, 'எண்: 4, அட்கின்சன் பேலஸ், ஜோதி வெங்கடாசலம் சாலை, காவல் கண்காணிப்பாளர் அலுவலக பின்புறம், வேப்பேரி' என்ற முகவரியில் நேரிலோ, 044 - 2561 0978, 2561 0369 என்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.