/உள்ளூர் செய்திகள்/சென்னை/ குன்றத்துார் தாலுகா ஆபீசில் 6 நாள் ஜமாபந்தி துவக்கம் குன்றத்துார் தாலுகா ஆபீசில் 6 நாள் ஜமாபந்தி துவக்கம்
குன்றத்துார் தாலுகா ஆபீசில் 6 நாள் ஜமாபந்தி துவக்கம்
குன்றத்துார் தாலுகா ஆபீசில் 6 நாள் ஜமாபந்தி துவக்கம்
குன்றத்துார் தாலுகா ஆபீசில் 6 நாள் ஜமாபந்தி துவக்கம்
ADDED : மே 22, 2025 12:27 AM
குன்றத்துார் குன்றத்துார் தாலுகாவில், வருவாய் துறை ரீதியான தீர்வுகளுக்கான ஆறு நாள் ஜமாபந்தி, நேற்று துவங்கியது.
முதல் நாளான நேற்று, படப்பை உள்வட்டத்தில் அடங்கிய அமரம்பேடு, நடுவீரப்பட்டு, சோமங்கலம், கரசங்கால், மணிமங்கலம், படப்பை உள்ளிட்ட 19 கிராமங்களுக்கு நடத்தப்பட்டது.
அதில், மக்களிடம் இருந்து, வீட்டு மனை பட்டா, பெயர் மாற்றம், வருமான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து ஆறு நாட்கள் நடக்கும் இந்த ஜமாபந்தியில், மே 22 மற்றும் 23ம் தேதி செரப்பணஞ்சேரி; மே 27ம் தேதி மாங்காடு; மே 28ம் தேதி கொளப்பாக்கம் 29ம் தேதி குன்றத்துார் உள்வட்டங்களை சேர்ந்த கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படவுள்ளன.