/உள்ளூர் செய்திகள்/சென்னை/மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்
மக்கள் பயன்பாட்டுக்கு வந்த அடி குழாய்கள்
ADDED : பிப் 24, 2024 12:10 AM
ஜல்லடையன்பேட்டை, பெருங்குடி மண்டலம், வார்டு 191, ஜல்லடையன்பேட்டை, ராகவேந்திரா காலனியில், 15 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய பேரூராட்சி நிர்வாகத்தால், 2 அடி குழாய்கள் நிறுவப்பட்டு, அதன் வாயிலாக அப்பகுதிமக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
இரு ஆண்டுகளாக, இந்த அடி குழாய்கள் பராமரிக்கப்படாமல், துருப்பிடித்து, பயனற்ற நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட துறையினரால், 2 அடி குழாய்களும் சரி செய்யப்பட்டு, தற்போது தண்ணீர் வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.