/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெங்களூரில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானங்கள் பெங்களூரில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானங்கள்
பெங்களூரில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானங்கள்
பெங்களூரில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானங்கள்
பெங்களூரில் மோசமான வானிலை சென்னை திரும்பிய விமானங்கள்
ADDED : ஜூன் 12, 2025 12:11 AM
சென்னை, கர்நாடக மாநிலம், பெங்களூரிவில் நேற்று முன்தினம் இரவு மோசமான வானிலை நிலவியது. இதனால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
மலேஷியா தலைநகர் கோலாலம்பூர்; தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமானங்கள், டில்லி, உ.பி., மாநிலம் கொராக்பூரில் இருந்து வந்த விமானம்;
ராஞ்சி, அகமதாபாத்தில் இருந்து பெங்களூர் வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல், நேற்று அதிகாலை சென்னைக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை விமான நிலையம் வந்து தரை இறங்கிய விமானங்களில் இருந்த பயணியருக்கு, குடிநீர், உணவு வழங்கப்பட்டது. பின், பெங்களூரில் வானிலை சீரான பின், விமானங்கள் புறப்பட்டு சென்றன.
**