/உள்ளூர் செய்திகள்/சென்னை/இரும்பு கிடங்கை உடைத்து பொருட்கள் திருடிய ஐவர் கைதுஇரும்பு கிடங்கை உடைத்து பொருட்கள் திருடிய ஐவர் கைது
இரும்பு கிடங்கை உடைத்து பொருட்கள் திருடிய ஐவர் கைது
இரும்பு கிடங்கை உடைத்து பொருட்கள் திருடிய ஐவர் கைது
இரும்பு கிடங்கை உடைத்து பொருட்கள் திருடிய ஐவர் கைது
ADDED : பிப் 06, 2024 12:29 AM
மணலி திருவொற்றியூர், கிராமணி தெருவைச் சேர்ந்தவர் குமரேசன், 37; மணலி, எலந்தனுாரில் கிடங்கை வாடகை எடுத்து, இரும்பு ஷட்டர் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை கிடங்கை திறக்க சென்ற போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அங்கிருந்தோர் உதவியுடன் அவர்களைப் பிடித்து, மணலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரித்தனர்.
இதில் அவர்கள், லாரி ஓட்டுனர்களான திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ராஜேஷ், 38, திண்டுக்கல்லைச் சேர்ந்த முத்துராஜ், 46, வெல்டரான திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திக், 28, பைக் மெக்கானிக்குகளான முரளி, 26, விஜய், 27, என தெரிந்தது.
போலீசாரிடம் இவர்கள் கூறியதாவது:
திருவொற்றியூரைச் சேர்ந்த மோகன், விஷ்ணு ஆகியோர் மூட்டை துாக்க எங்களை அழைத்து வந்தனர். இந்த கிடங்கில் இருந்த இரும்பு மற்றும் ஏற்கனவே பிற பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட புது துணிகளை, இருவரும் மினி வேனில் ஏற்றிச் சென்றுள்ளனர்.
திரும்பி வரும் வரை, கிடங்கில் இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றனர்.
இவ்வாறு, போலீசாரிடம் கூறியுள்ளனர்.
புது துணிகள் எங்கிருந்து திருடி வரப்பட்டது என்பது குறித்த விபரம் தெரியவில்லை. இதையடுத்து, ஐவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.