ADDED : ஜூன் 02, 2025 03:27 AM

காசிமேடு:கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும், 61 நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்., 15ம் தேதி துவங்கியது. ஜூன் 14ம் தேதி நள்ளிரவு வரை தடைக்காலம் அமலில் உள்ளது.
தடை காரணமாக, மீனவர்கள் விசைபடகுகளை தவிர்த்து, பைபர் படகுகளை கொண்டு, கரை ஓரமாக மீன் பிடித்து காசிமேடு பழைய மீன் ஏலக்கூடத்தில் விற்பனை செய்து வருகின்றனர். நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 40க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீனவர்கள் சென்று மீன் பிடித்து விற்பனைக்கு கொண்டு வந்தனர். மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், மீன் விலை உயர்ந்தது.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)
வஞ்சிரம் 1600 - 1800
சூரை 300 - 400
பாறை 500 - 800
கொடுவா 1000 - 1100
சங்கரா 600 - 700
பர்லா 300 - 400
கவல 200 - 250
நெத்திலி 300 - 400
கடல் விரால் 700 - 900
மத்தி 250 - 300
இறால் 500 - 600
நண்டு 300 - 500