ADDED : ஜன 05, 2024 12:53 AM
சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கான சூர்யா இசைப்பள்ளியின் முதலாம் ஆண்டு விழா மயிலையில் நாளை நடக்க உள்ளது.
மயிலாப்பூர், பி.எஸ். மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் நாளை மாலை 4:30 மணியளவில் நடக்கும் விழாவில், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே, தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகரும், சமூக ஆர்வலருமான ஜீவா ரவி, வழக்கறிஞர் இளைய கட்டபொம்மன், சூர்யநாராயணன், லலிதா சூர்ய நாராயணன், இந்தோ - ருஷ்யன் பிலிம் கிளப் தலைவர் மெய் ரூஸ்வெல்ட் பங்கேற்கின்றனர்.
மேலும் விழாவில், சங்கரராமன், லட்சுமி, வித்யாசாகர், டாக்டர்.வசுதா பிரகாஷ், டாக்டர்.ஆண்டவர் பி.ஜெயதேவ், டாக்டர்.நாகராணி, ஐயப்பன், உஷாசுரேஷ், டாக்டர்.சுமித்ரா பிரசாத், மனோ ரஞ்சனி ஆகியோர் விருது பெறுகின்றனர். தி ஸ்பாடிக்ஸ் சொசைட்டி ஆப் தமிழ்நாடு, வேவ்ஸ் கிரியேஷன், ஸ்பெஷல் சைல்ட் அசிஸ்டெண்ட்ஸ் நெட்வொர்க் ஆகிய நிறுவனங்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை டாக்டர். பிரபா குருமூர்த்தி செய்து அனைவரையும் வரவேற்றுள்ளார்.