Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ முறிந்து விழுந்த மரக்கிளை: உயிர் தப்பிய மாணவர்கள்

முறிந்து விழுந்த மரக்கிளை: உயிர் தப்பிய மாணவர்கள்

முறிந்து விழுந்த மரக்கிளை: உயிர் தப்பிய மாணவர்கள்

முறிந்து விழுந்த மரக்கிளை: உயிர் தப்பிய மாணவர்கள்

ADDED : ஜூன் 26, 2025 12:13 AM


Google News
Latest Tamil News
திருவொற்றியூர்,திருவொற்றியூர், தேரடி, பூந்தோட்ட தெருவில், தனியார், மாநகராட்சி பள்ளிகள், அரசு கல்லுாரி செயல்படுகின்றன. 2,000க்கும் அதிகமான மாணவர்கள், இவ்வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை, திடீரென சாலையோரம் இருந்த இயல்வாகை மரத்தின் கிளை முறிந்து விழுந்தது.

இதில், பூந்தோட்ட தெருவில் போக்குவரத்து முடங்கியது. தீயணைப்பு துறையினர் முறிந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

மாலை 5:00 மணிக்கு பின், மரக்கிளை முறிந்து விழுந்தததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மாணவர்கள் அனைவரும், பள்ளி கல்லுாரி முடிந்து வீட்டிற்கு சென்று விட்டதால், அதிர்ஷ்டவசமாக எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us