ADDED : ஜன 25, 2024 12:18 AM
சென்னை, ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
வரும் 31 முதல் பிப்., 2ம் தேதி வரை, காலை 10:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், ஏற்றுமதி சந்தையின் தேவை, ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான சட்டங்கள், அன்னிய செலாவணி விகிதம், காப்பீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை வழங்கப்படும்.
பயிற்சியில், 18 வயது முடிவடைந்த, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். இதுதொடர்பான கூடுதல் விபரங்களை, www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.