/உள்ளூர் செய்திகள்/சென்னை/மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
மெட்ரோ ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்படும் வசதிகள்
ADDED : ஜன 07, 2024 12:26 AM
சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 40 எஸ்கலேட்டர்கள், 10 லிப்ட்கள் கொண்டு வரும் பணிகள் அடுத்த எட்டு மாதங்களில் முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பயணியர் வருகைக்கு ஏற்றார்போல், மெட்ரோ ரயில் நிலையங்களில் வசதிகள் விரிவுப்படுத்தப்பட உள்ளன.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மெட்ரோ ரயில்களில் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, கூடுதல் எஸ்கலேட்டர்கள், லிப்ட் வசதிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பயணியர் வருகை அதிகமாக உள்ள எழும்பூர், திருமங்கலம், அண்ணாநகர், ஆலந்துார், கோயம்பேடு, டி.எம்.எஸ்., ஆயிரம்விளக்கு உள்ளிட்ட 10 மெட்ரோ ரயில் நிலையங்களில், 40 எஸ்கலேட்டர்கள் மற்றும் 10 லிப்ட்கள் அமைக்கப்பட உள்ளன. அடுத்த எட்டு மாதங்களில் இந்த பணிகள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
மெட்ரோ ரயில் நிலைங்களில் இருந்து குடியிருப்புகள், தனியார் அலுவலகங்கள், பேருந்து நிலையங்களுக்கு செல்லும் வகையில், எட்டு - ஐந்து பேர் பயணிக்கும் வகையிலான பேட்டரி வாகனங்களை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவர, தனியார் ஒப்பந்தாரர்களை தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.