/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, எலியட்சில் குதுாகலம்ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, எலியட்சில் குதுாகலம்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, எலியட்சில் குதுாகலம்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, எலியட்சில் குதுாகலம்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் மெரினா, எலியட்சில் குதுாகலம்
ADDED : ஜன 01, 2024 01:50 AM

சென்னை:மெரினா கடற்கரை காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் பல ஆயிரம் பேர் திரண்டு, ஆங்கில புத்தாண்டை வரவேற்று உற்சாகமடைந்தனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, சென்னையில், கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் தலைமையில் மேற்பார்வையில், 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
'விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்' எனும் இலக்குடன் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு தலா, 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. முக்கிய சந்திப்புகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.
காவல் துறையினரின் அனுமதி பெற்று, புத்தாண்டு கொண்டாடப்பட்ட கேளிக்கை விடுதிகள், பண்ணை வீடுகள், நட்சத்திர ஹோட்டல்களில், இரவு 1:00 மணிக்கு மேல் இருந்தோர் வெளியேற்றப்பட்டனர்.
சென்னை மெரினா கடற்கரை உள்ள காமராஜர் சாலையில், நேப்பியர் பாலத்தில் இருந்து கலங்கரை விளக்கம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அங்கு, நள்ளிரவில் ஆங்கில புத்தாண்டை வரவேற்று பல ஆயிரம் பேர் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, எலியட்ஸ் கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது.
பெண்களின் பாதுகாப்பு மற்றும் திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்றங்களை தடுக்க, 'ட்ரோன்' வாயிலாக போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆங்கில புத்தாண்டு பிறந்துள்ளதால் வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பஸ், ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.