/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.26 கோடி செலுத்தியும் மின் வழித்தடம் மாற்ற மின் வாரியம் தாமதம் ரூ.26 கோடி செலுத்தியும் மின் வழித்தடம் மாற்ற மின் வாரியம் தாமதம்
ரூ.26 கோடி செலுத்தியும் மின் வழித்தடம் மாற்ற மின் வாரியம் தாமதம்
ரூ.26 கோடி செலுத்தியும் மின் வழித்தடம் மாற்ற மின் வாரியம் தாமதம்
ரூ.26 கோடி செலுத்தியும் மின் வழித்தடம் மாற்ற மின் வாரியம் தாமதம்
ADDED : மே 25, 2025 01:06 AM
சென்னை:திருச்சி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அருகில், 372 கோடி ரூபாயில், 5.58 லட்சம் சதுர அடியில் டைடல் பார்க் கட்டடம் கட்டும் பணியை, தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் மேற்கொள்கிறது.
ஒப்பந்த நிறுவனம் வாயிலாக, சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த பணிகளை, ஒன்றரை ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. டைடல் பார்க் கட்டப்படும் இடத்திற்கு மேல், மின் கோபுர வழித்தடம் செல்கிறது.
அங்குள்ள இரு மின் கோபுரங்களை, கட்டுமானத்திற்கு இடையூறு இல்லாமல் வேறு இடத்திற்கு மாற்றி வைப்பதற்காக, 26 கோடி ரூபாயை, கடந்த ஆண்டு டிசம்பரில் மின் வாரியத்திற்கு, டைடல் பார்க் நிறுவனம் செலுத்தியுள்ளது. இருப்பினும் இதுவரை, மின் கோபுர வழித்தடங்கள் மாற்றப்படவில்லை.
இந்த பணியை விரைந்து செய்து தருமாறு, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள், மின் வாரியத்திடம் சில தினங்களுக்கு முன் வலியுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து, மின் வழித்தடத்தை விரைந்து மாற்றி தர, அதிகாரிகளுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது.