/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்கம்பி அறுந்து விழுந்து 5 எருமைகள் உயிரிழப்பு மின்கம்பி அறுந்து விழுந்து 5 எருமைகள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 5 எருமைகள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 5 எருமைகள் உயிரிழப்பு
மின்கம்பி அறுந்து விழுந்து 5 எருமைகள் உயிரிழப்பு
ADDED : மே 25, 2025 01:57 AM

செம்மஞ்சேரி:தாழம்பூரைச் சேர்ந்தவர் ரத்னம், 65. இவர், எருமை மாடுகள் வளர்த்து வருகிறார். அவற்றை, செம்மஞ்சேரி, காந்தி நகர், மகா நகர், ஜவகர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், திறந்தவெளியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.
நேற்று காலை வழக்கம்போல மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஐந்து எருமை மாடுகள் மீது, மின் கம்பி அறுந்து விழுந்தது.
இதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவை இறந்தன. சத்தம் கேட்டு வந்த பகுதிவாசிகள், உடனே மின் இணைப்பை துண்டித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மூன்று மணி நேர தாமதத்திற்கு பின் சம்பவ இடத்திற்கு வந்த மின் வாரிய அதிகாரிகள், அறுந்த மின் கம்பியை இணைத்து, மின் வினியோகத்தை சீராக்கினர்.
இது குறித்து பகுதிவாசிகள் கூறுகையில், 'இப்பகுதியில் அடிக்கடி மின் கம்பிகள் அறுந்து விழுகின்றன. நான்கு நாட்களுக்கு முன் மின் கம்பி அறுந்து விழுந்தது. அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இதையடுத்து, புதிய கம்பி மாற்ற வலியுறுத்தினோம்; அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. அப்போது நடவடிக்கை எடுத்திருந்தால், அதே கம்பி அறுந்து விழுந்து, ஐந்து எருமை மாடுகள் பலியான, இந்த சம்பவம் நடந்திருக்காது' என்றனர்.