/உள்ளூர் செய்திகள்/சென்னை/ டிவிஷன் கால்பந்து போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம் டிவிஷன் கால்பந்து போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம்
டிவிஷன் கால்பந்து போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம்
டிவிஷன் கால்பந்து போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம்
டிவிஷன் கால்பந்து போட்டி மழையால் மீண்டும் நிறுத்தம்
ADDED : ஜூன் 13, 2025 12:23 AM

சென்னை, சென்னையில் பெய்து வரும் மழையால், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் போட்டி, இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னை கால்பந்து அமைப்பு சார்பில், ஆடவருக்கான நான்காவது டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை பேசின் பிரிட்ஜ், டான் பாஸ்கோ மைதானத்தில் நடக்கிறது.
கடந்த இரண்டு நாளாக சென்னையில் பெய்து வரும் மழையால் அனைத்து கால்பந்து மைதானங்களிலும் நீர் தேங்கியுள்ளது.
இதனால், நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டி இரண்டாவது நாளாக நிறுத்தப்பட்டு, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.
மைதானத்தில் தேங்கிய மழைநீர் வற்றும் வரை, கால்பந்து போட்டிகளை நடத்த இயலாது; போட்டிகள் நடக்கும் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும் என, கால்பந்து அமைப்பு தெரிவித்துள்ளது.