/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா
கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா
கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா
கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா
ADDED : ஜூன் 10, 2025 12:38 AM

சென்னை, கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையத்தின் வைரவிழா, இன்று நடக்கிறது.
சென்னை, தரமணி, சி.எஸ்.ஐ.ஆர்., வளாகத்தில், 37 துணை நிறுவனங்கள் உள்ளன. இதில், எஸ்.இ.ஆர்.சி., என்ற கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மையம், 1965ல் துவக்கப்பட்டது. இதன், 60வது ஆண்டு வைர விழா, இன்று நடைபெற உள்ளது.
இதுகுறித்து, கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய இயக்குனர் ஆனந்தவள்ளி கூறியதாவது:
இந்தியாவில் உள்ள பல கட்டுமானங்களுக்கு, இந்த நிறுவனம் உறுதுணையாக இருந்துள்ளது. கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் முறுக்கு கம்பியை உருவாக்கியது உள்ளிட்ட பல புதுமைகளை படைத்துள்ளோம்.
பாரம்பரிய கட்டடங்களின் உறுதிதன்மை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து வருகிறோம். அறிவியல் வளர்ச்சி காரணமாக, தற்போது புதுமையான வடிவமைப்புகள் கொண்ட கட்டுமானங்களை உருவாக்க பல்வேறு வகைகளில் ஆராய்ச்சி செய்து வருகிறோம். குறைந்த காலத்தில் அதிக உறுதி தன்மை கொண்ட கட்டடங்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். வைர விழாவை ஒட்டி 3டியில் உருவாக்கிய கட்டடம் திறக்கப்பட உள்ளது. புதுமையான கட்டுமானங்கள் தொடர்பான ஆய்வு நுால்கள் வெளியிட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், கட்டுமான பொறியியல் ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானிகள் பாரிவள்ளல், சதீஷ்குமார், சப்தரிஷி சஸ்மால், பி.ஐ.பி., இயக்குனர் அருண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.