ADDED : செப் 22, 2025 03:17 AM
திருவொற்றியூர்: தமிழக அரசை கண்டித்து, வடசென்னை திருவொற்றியூர் மாவட்டம், நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று காலை, கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவொற்றியூர் - அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், திருவொற்றியூர் தொகுதியில், தொழிற்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு 75 சதவீதம் வேலைவாய்ப்பு வாங்கி தரப்படும்;
திருவொற்றியூரில் பொறியியல் கல்லுாரி; எர்ணாவூர் சுனாமி குடியிருப்பிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட எண்ணுார் காவல் நிலையம், எண்ணுாருக்கே மாற்றம் செய்யப்படும் உள்ளிட்ட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை என கண்டித்து, ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
இதில், கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அனுமதியின்றி போராடியதாக, திருவொற்றியூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.