Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் போக்குவரத்தில் இன்று மாற்றம்

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் போக்குவரத்தில் இன்று மாற்றம்

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் போக்குவரத்தில் இன்று மாற்றம்

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் போக்குவரத்தில் இன்று மாற்றம்

ADDED : செப் 22, 2025 03:17 AM


Google News
சென்னை:சென்னையில் இன்று நடக்கும் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், பிரதான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும், திருப்பதி திருக்குடை உபய உத்சவம் நடந்து வருகிறது.

இந்தாண்டு உத்சவம், இன்று காலை 10:30 மணிக்கு, பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள, சென்னசேகவ பெருமாள் கோவிலில் பூஜையுடன் துவங்குகிறது. மாலை 4:00 மணிக்கு திருக்குடை யானைக்கவுனியை தாண்டுகிறது.

விழாவில், ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் எஸ்.வேதாந்தம், அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். திருக்குடைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வரும் 27ம் தேதி திருப்பதியை சென்றடையும்.

இதுகுறித்து, காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

காலை 8:00 மணி முதல் திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, என்.எஸ்.சி., போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அவ்வாகனங்கள், ராஜாஜி சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை மற்றும் பிரகாசம் சாலை வழியாக செல்லலாம்

 மாலை 3:00 மணி முதல் ஊர்வலம் யானைகவுனி பாலத்தை கடக்கும் வரை, வால்டாக்ஸ் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. வாகன ஓட்டிகள் பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்

 ஊர்வலம் யானைக்கவுனி பாலத்தை கடக்கும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை மற்றும் ராஜா முத்தையா சாலை வழியாக செல்லலாம்

 ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் வரும்போது, மசூதி பகுதியில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

 ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் வரும்போது, நாராயணகுரு சாலை, ஈ.வி.கே. சம்பத் சாலை சந்திப்பிலிருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

 பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஊர்வலம் வரும்போது, டவுட்டன் சந்திப்பிலிருந்து, பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் நாராயண குரு சாலை வழியாக செல்லலாம்

 ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பிலிருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஓட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்

 ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பிற்கு வரும்போது கொன்னுார் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பிலிருந்து, ஓட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அவ்வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்

 ஊர்வலம் கொன்னுார் நெடுஞ்சாலையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அடையும்போது, ஓட்டேரி சந்திப்பு மற்றும் மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து கொன்னுார் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை.

அவ்வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பிலிருந்து குக்ஸ் சாலை வழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையிலிருந்து வி.பி.காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாக செல்லலாம்.

இவ்வாறு காவல் துறை அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us