/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணிடம் சில்மிஷம் 'டெலிவரி பாய்' கைது பெண்ணிடம் சில்மிஷம் 'டெலிவரி பாய்' கைது
பெண்ணிடம் சில்மிஷம் 'டெலிவரி பாய்' கைது
பெண்ணிடம் சில்மிஷம் 'டெலிவரி பாய்' கைது
பெண்ணிடம் சில்மிஷம் 'டெலிவரி பாய்' கைது
ADDED : மே 31, 2025 03:13 AM
அண்ணா நகர்:அண்ணா நகரைச் சேர்ந்த, 25 வயது இளம்பெண், நேற்று முன்தினம், தன் தோழியை பார்த்துவிட்டு, ஆறாவது அவென்யூவில் நடந்து சென்றார்.
அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், பெண்ணின் பின்புறமாக தட்டி 'சில்மிஷம்' செய்து தப்பினார்.
இதுகுறித்து இளம்பெண், அண்ணா நகர் போலீசில், உடனடியாக புகார் அளித்தார். போலீசார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் வழக்கு பதிந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.
அப்போது, சில்மிஷத்தில் ஈடுபட்ட நபர், 11வது பிரதான சாலையில் தனியாக அமர்ந்திருப்பது தெரிந்தது.
அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்ததில், திருப்பூர், உடுமலைபேட்டையைச் சேர்ந்த ஆன்ட்ரு ஜான்பால், 24 என்பதும், திருவல்லிக்கேணியில் தங்கி, ஆன்லைன் உணவு டெலிவரி வேலை செய்வதும் தெரிந்தது.
புகார் அளித்த, நான்கு மணி நேரத்திற்குள் வாலிபரை கைது செய்து, போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.